ශ්රී ලංකාවට නිදහස ලබා ගෙන 73 වසරක් පිරීම නිමිත්තෙන් ශ්රී ලංකාවාසී සියලු දෙනාටත් ලොවවටා සියලු ශ්රී ලාංකිකයන්ටත් සුබ පැතීමට ලැබීම ගැන සතුටු වෙමි.
බටහිර විදේශ ආක්රමණ විසින් මෙරට වසර හාරසීය පනහක් පමණ යටත් විජිතයක් බවට පත් කොට ශ්රී ලාංකිකයන් සමාජ ආර්ථික හා දේශපාලන වශයෙන් පීඩාවට පත් කිරීමට එරෙහිව ලෝකයේ ශ්රේෂ්ඨ හා පෞඪ ජාතියක් ලෙස ජාතික විමුක්ති අරගල රැසක් මෙහෙයවමින් නිදහස, ස්වාධීනත්වය හා ස්වෛරීත්වය උදෙසා අපේ අතීත ජාතික විරුවන් හා රණවිරුවන් කටයුතු කර ඇති ආකාරය අභිමානයෙන් සමරමු.
පෘතුගීසි, ලන්දේසි හා ඉංග්රීසි ජාතීන්ගෙන් ශ්රී ලංකාව නිදහස් කර ගැනීමේ දී සියලු භේද වලින් තොරව ශ්රී ලාංකිකයින් ලෙස එකමුතුව කටයුතු කර අපේ මාතෘ භූමිය නිදහස් කර ගැනීම සම්බන්ධයෙන් ඔවුන් තුළ තිබූ කැපවීම හා අධිෂ්ඨානය අප සිහිපත් කරන්නේ ගෞරවයෙනි.
එසේ 1948 පෙබරවාරි 04 වන දා ලබා ගත් නිදහසේ හැත්තෑතුන් වන සංවත්සරය අද දින සමරනු ලබන්නේ මහත් වූ අභිමානයෙනි.
<p style=”float: left;”>
<ins class=”adsbygoogle”
style=”display: inline-block;width: 300px; height: 250px;”
data-ad-client=”ca-pub-6070269274916194″
data-ad-slot=”7224631868″ data-language=”en”>
<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
</ins></p>
1948 පෙබරවාරි 04 වන දා අප දිනා ගත් නිදහස 1972 මැයි 22 දින ශ්රී ලංකාව ජනරජයක් බවට ප්රකාශ කිරීමෙන් බ්රිතාන්ය කිරීටයෙන් සම්පූර්ණයෙන්ම ගැළවීමට අපට හැකි විය.
ශ්රී ලංකා ජනාධිපති අතිගරු ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා ගේ සෞභාග්යයේ දැක්ම ප්රතිපත්ති ප්රකාශනය යතාර්ථයක් බවට පත්කර ගෙන නිදහස්, ස්වාධීන, ස්වෛරී, සෞභාග්යමත් ශ්රී ලංකාවක් ගොඩනැගීමට අප සියලු දෙනා අද දිනයේ ද සපථ කරන්නේ හැත්තෑතුන් වසරක විවිධ අභියෝග ජයගනිමින් බව ද සිහිතබා ගනිමු.
මෙරටේ ස්වෛරීභාවය, ස්වාධීනත්වය හා භෞමික අඛණ්ඩතාවයට එරෙහිව ජාතික හා ජාත්යන්තරව ගොඩ නැඟුණු අභියෝග ද අප සිහියේ තබා ගත යුතුය. වසර 30 ක් පුරාවට පැවැති බෙදුම්වාදී මිලේච්ඡ ත්රස්තවාදය පරාජය කර ලෝකයේ රටවල් සමඟ මිත්ර සබඳතා පවත්වාගෙන ශ්රී ලංකාව සෞභාග්යමත් දේශයක් කරන්නට අධිෂ්ඨානශීලී ගමනක යෙදී සිටිමු.
ඒ අතර අද අප හා ලොව අනපේක්ෂිත ලෝක වසංගතයකට මුහුණ දී සිටින්නෙමු. ලෝකයම ගොදුරු කර ගෙන සිටින කොවිඩ්. 19 වසංගතයෙන් ද අපට ජයගත හැකිය. ලෝකයේ දියුණු තාක්ෂණය හා දේශීය පාරම්පාරික අත්දැකීම් පාදක කර ගනිමින් මෙම වසංගතය පරාජය කරන්නට රජය ගෙන යන වැඩ පිළිවෙල සාර්ථක කර ගැනීමට සහය දීම අප සියලු දෙනා ගේ වගකීමකි.
අප දිනාගෙන ඇති නිදහස අඛණ්ඩව ස්වාධීන ස්වෛරී ප්රජාතන්ත්රවාදී ඒකීය රාජ්යයක් ලෙස මධ්යස්ථ හා නොබැඳුනු විදේශ ප්රතිපත්තියට මුල් තැන දෙමින් සියලු රාජ්යයන් සමඟ මිත්රත්වයෙන් සහයෝගීතාව පවත්වා ගනිමින් ශ්රී ලංකාවේ ගෞරවය හා අභිමානය අනන්යතාවය රැකගෙන අපි ඉදිරියටම යමු.
දිනේෂ් ගුණවර්ධන
சவால்களிலிருந்து மீண்டெழுவதற்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோராகவிருப்போம்
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 73வது ஆண்டு விழாவை முன்னிட்டு, இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
உலகின் ஒரு சிறந்த மற்றும் பெருமைமிக்க தேசம் என்ற வகையிலும், மேற்கத்தேய வெளிநாட்டுப் படையெடுப்புக்களால் நானூற்று ஐம்பது ஆண்டுகளாக நாட்டில் குடியேற்றங்களை மேற்கொள்வதன் மூலமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிரான ஒரு தேசம் என்ற வகையிலும், நாட்டின் விடுதலை, சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காக எமது கடந்தகால தேசிய வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் செயற்பாடுகளை பெருமையுடன் கொண்டாடுகின்றோம்.
<p style=”float: left;”>
<ins class=”adsbygoogle”
style=”display: inline-block;width: 300px; height: 250px;”
data-ad-client=”ca-pub-6070269274916194″
data-ad-slot=”7224631868″ data-language=”en”>
<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
</ins></p>
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களிடமிருந்து இலங்கையை விடுவிப்பதில் எந்தவித பாகுபாடும் இன்றி இலங்கையர்களாக ஒன்றிணைந்து பணியாற்றியதன் மூலம், எமது தாய்நாட்டை விடுவிப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை நாம் மரியாதையுடன் நினைவு கூர்கின்றோம். 1948 பிப்ரவரி 04ஆந் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தின் 73வது ஆண்டு நிறைவை இன்றைய தினம் குறித்து நிற்கின்றது.
1948 பிப்ரவரி 04ஆந் திகதி நாம் வெற்றி கொண்ட சுதந்திரமும், 1972 மே 22ஆந் திகதி இலங்கையை குடியரசாக அறிவித்தமையும் பிரித்தானிய ஆட்சியில் இருந்து முற்றிலும் விடுபடுவதற்கு எமக்கு உதவியது.
இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை‘ என்ற இலக்குகளை யதார்த்தமயமானதாக மாற்றுவதற்கும், பல்வேறு சவால்களைத் தாண்டி எழுபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சுதந்திரமான, சுயாதீனமான, இறையாண்மை மிக்க மற்றும் வளமான இலங்கையை உருவாக்குவதற்கும் இன்று நாம் அனைவரும் உறுதிபூணுகின்றோம் என்பதையும் நினைவில் கொள்வோம்.
இந்த நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச அளவில் எழுந்துள்ள சவால்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். 30 ஆண்டுகால பிரிவினைவாத மற்றும் கொடூரமான பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர், உலக நாடுகளுடன் நட்புறவைப் பேணி, இலங்கையை வளமான நாடாக மாற்றியமைப்பதற்கு நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
இதற்கிடையில், எதிர்வுகூற முடியாத உலகளாவிய தொற்றுநோயை நாமும் முழு உலகமும் இன்று எதிர்கொள்கின்றோம். முழு உலகையும் பாதிக்கும் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து எம்மால் மீண்டெழ முடியும். இந்தத் தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கான உலகின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டுப் பாரம்பரிய அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் திட்டத்தை ஆதரிப்பது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.
<p style=”float: left;”>
<ins class=”adsbygoogle”
style=”display: inline-block;width: 300px; height: 250px;”
data-ad-client=”ca-pub-6070269274916194″
data-ad-slot=”7224631868″ data-language=”en”>
<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
</ins></p>
நாம் வெற்றி கொண்ட சுதந்திரத்துடன், இலங்கையின் கௌரவம், பெருமை மற்றும் அடையாளத்தைப் பேணும் அதே நேரத்தில் அனைத்து அரசுகளுடனும் நட்பு ரீதியான ஒத்துழைப்பைப் பேணி, நடுநிலையான மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கு முன்னுரிமை அளித்து, சுதந்திரமான, இறையாண்மை மிகுந்த, ஜனநாயக ரீதியான, ஒற்றையாட்சி நாடாக முன்னேற்றமடைவோம்.